/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நேர்முக தேர்வில் ரூ.28 லட்சம் ஊதியத்தில் தேர்வான மாணவி
/
நேர்முக தேர்வில் ரூ.28 லட்சம் ஊதியத்தில் தேர்வான மாணவி
நேர்முக தேர்வில் ரூ.28 லட்சம் ஊதியத்தில் தேர்வான மாணவி
நேர்முக தேர்வில் ரூ.28 லட்சம் ஊதியத்தில் தேர்வான மாணவி
ADDED : மே 03, 2025 06:25 AM
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கத்தார் நாட்டின் 'மேக்னிபுரோ டெக்னாலஜி' என்ற பன்னாட்டு நிறுவனத்தின் ஆன்லைன் தொழில்நுட்ப தேர்வில் பங்கேற்றனர்.
இதில் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவி மமிதா செக்யூரிட்டி ஆப்பரேஷன் சென்டர் அனாலிஸ்ட் பணிக்கு ஆண்டிற்கு ரூ.28 லட்சம் சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
மாணவியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரிச் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம், கல்லுாரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன், கணினி அறிவியல் துறை தலைவர் ஜெ.மதளைராஜ், போராசிரியர்கள் பாராட்டி, பணி நியமன ஆணையை வழங்கி சிறப்பித்தனர்.