/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெற்றோரை இழந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 458 மதிப்பெண் பெற்ற சாதனை

ADDED : மே 17, 2025 03:34 AM

ஆண்டிபட்டி: வருஷநாடு அருகே கோவில்பாறை கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஜெயகிருத்திகா 10ம் வகுப்பு தேர்வில் 458 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வருஷநாடு அருகே கோவில்பாறை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - கிருஷ்ணசெல்வி இவர்களின் மகள் ஜெயகிருத்திகா. வேளாண்மை துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக இருந்த செந்தில்குமார் மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை செந்தில்குமார் மற்றும் தாத்தா பாட்டி பராமரிப்பில் ஜெயகிருத்திகா வளர்ந்தார். கடமலைக்குண்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் தேர்வு எழுத செல்லும் நாளில் தந்தை செந்தில்குமார் இறந்துவிட்டார். தந்தை இறந்த சோகத்துடன் அறிவியல் தேர்வை எழுதிவிட்டு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 10ம் வகுப்பு பொது தேர்வில் ஜெயகிருத்திகா 458 மதிப்பெண் பெற்றுள்ளார். தந்தை இறந்த நாளில் எழுதிய அறிவியல் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் சாதனை படைத்துள்ள ஜெயகிருத்திகாவை பள்ளி நிர்வாகத்தினர் பொதுமக்கள் பாராட்டினர்.