/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில குத்துச்சண்டை போட்டி போடி மாணவர்கள் சாதனை
/
மாநில குத்துச்சண்டை போட்டி போடி மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 03, 2025 12:23 AM
போடி: மாநில அளவில் நடந்த குத்து சண்டை போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு குத்துச் சண்டை சங்கம், சென்னை ஆர்.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில குத்துச் சண்டை போட்டி சென்னையில் நடந்தது. 700 பேர் கலந்து கொண்டனர். இதில் போடி நீலமேகம் பாக்சிங் அகாடமி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜூனியர் பெண்களுக்கான போட்டியில் 63, -66 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கைவேணி முதலிடம் பெற்று தங்கம் வென்றார். 60,- 63 கிலோ எடை பிரிவில் பாண்டிமீனா இடம் 2 ம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், 85 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கேஸ்வரி 3 ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
கப் பாக்சிங் பெண்கள் பிரிவு போட்டியில் 30 - 32 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., பள்ளி மாணவி சக்தி ஸ்ரீ 2 ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். 28, - 30 கிலோ எடை பிரிவில் போடி திருமலாபுரம் காமராஜ் வித்தியாசாலை மெட்ரிக் பள்ளி மாணவி பிரகதீசா, 34, - 36 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி லக்சிதா, 44, - 46 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேஜா ஸ்ரீ 3 ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர்.
சப் ஜூனியர் ஆண்ளுக்கான போட்டியில் 52, - 54 கிலோ எடை பிரிவில் போடி 7 வது வார்டு நகராட்சி மேல் நிலைப் பள்ளி மாணவர் கவிபாரதி 3 ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர். ஜூனியர் ஆண்களுக்கான போட்டியில் 57, -60 கிலோ எடை பிரிவில் தேனி முத்து தேவன்பட்டி போதி காம்பஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ஜெய்தீப், கப் பாக்சிங் ஆண்களுக்கான போட்டியில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர் அவிநாஸ், யூத் ஆண்களுக்கான போட்டியில் சேலம் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர் அருண் பாண்டியன் 3 ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர்.
தேனி மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க தலைவர் வடமலை ராஜையபாண்டியன், மாவட்ட செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர் மீனா, மோனீஸ்வர், வாஞ்சிநாதன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.