/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலேசியா யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
/
மலேசியா யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 19, 2025 12:53 AM

கம்பம்; மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் கம்பம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.
மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச யோகா போட்டிகள் நடைபெற்றது. ஆக, 15,16ம் தேதிகளில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி, பேர்லேண்ட் பள்ளிகளை சேர்ந்த ஆறு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவர் ரித்திகேஷ் 9 முதல் 13 வயது பிரிவில் முதலிடம் பெற்றார். தொடர்ந்து 13 முதல் 15 வயது பிரிவில் நாகமணியம்மாள் பள்ளி மாணவர் விபின் மற்றும் ராமச்சந்திரன் பொதுப் பிரிவில் தங்கம் பெற்றார். பேர்லேண்ட் பள்ளி மாணவிகள் யாஷிகா, சக்தி யோகனா 16 முதல் 18 வயது பிரிவில் தங்கம் வென்றனர். குமுளி அமலாம்பிகை பள்ளி மாணவர் அக்சய் 16 முதல் 18 வயது பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகங்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். இவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து சென்ற யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.