/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இணையத்தில் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு ஆலோசனை

ADDED : ஜூன் 28, 2025 12:51 AM
தேனி: போடி சி.பி.ஏ., கலை அறிவியல் கல்லுாரி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து மாணவர்கள் தப்பிக்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட சைபர் கிரைம் தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், ஓ.டி.பி., அனுப்பக்கூறி நடக்கும் குற்றங்கள், சமூக வலை தளங்களில் நடக்கும் குற்றங்கள், ஆன்லைன் கேம் குற்றங்கள், போலி அப்ளிகேசன்ஸ் மூலம் கடன் பெறுவோர் சிக்கிக்கொள்ளும் குற்றங்கள், போலி வேலை வாய்ப்புக்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் என பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறும் விதம், அதிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையார்கள்எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் ஸ்கீரின் டைம் என்ற நேரத்தை குறைத்து, இணையத்தை ஒவ்வொருநொடியும் கவனமாக பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்க வேண்டாம்.
புகார்களை 1930 என்ற சைபர் கிரைம் இலவச உதவிஎண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியிலும் தெரிவிக்கலாம், என்றார். கல்லுாரி முதல்வர் நன்றி தெரிவித்தார்.