/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவிகள் தங்கும் விடுதிக்கு மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
/
மாணவிகள் தங்கும் விடுதிக்கு மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
மாணவிகள் தங்கும் விடுதிக்கு மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
மாணவிகள் தங்கும் விடுதிக்கு மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 02, 2025 07:02 AM
மூணாறு: மூணாறில் மாணவிகளுக்கு தேவிகுளம் ஒன்றியம், ஆதிதிராவிட நலத்துறை ஆகியோர் சார்பில்  'பிரீ மெட்ரிக் ஹாஸ்டல்' செயல்படுகிறது. அதில் 2025- -2026 கல்வியாண்டில் மாணவிகள் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அது தொடர்பாக தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஷைன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் 5 முதல் 10ம் வகுப்பு  படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் 90 சதவிகிதம் பிற பிரிவினர் 10 சதவிகிதம் என்ற அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.  தங்கும் விடுதியில் இருந்து 8 கி.மீ., தொலைவுக்கு அப்பால் வசிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வராதபட்சத்தில் மற்ற விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
மாணவிகள் ஜாதி, வருமானம் சான்றிதழ்கள், கடந்தாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி, தற்போது படிக்கும் வகுப்பு ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கும் சான்றிதழுடன் மே 15 மாலை 5:00 மணிக்கு முன்பாக  தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

