/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
/
மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 15, 2024 05:29 AM
தேனி: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு,பட்டமேற்படிப்பு பயிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2024 - 2025 கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப் பிக்கலாம் என,கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரரின்ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கற்றல் கட்டணம்,சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்ட தொகை அரசால் வழங்கப்படும். விண்ணப்பங்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை - 5 என்ற முகவரியிலோ, தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும் ttps://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை
பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரகம்,எழிலகம் இணைப்பு கட்டடம்,2வது தளம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கும், புதுப்பித்தல் விண்ணப்பங்களை 2024 டிச.15க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 2025 ஜன.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.