/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 10, 2025 02:05 AM
தேனி: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை சார்பில் 23 பள்ளி விடுதிகள், 6 கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் விடுதிகளில் சேரலாம். உணவு, சீருடைகள், நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நுால்கள் வழங்கப்படும்.
விரும்புவோர், ''கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, ஜூலை 15க்குள் சம்பந்தப்பட்ட விடுதியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளும் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளனர்.