நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் முகில்ராணி, பவஸ்ரீ, எழில்நிலா, பிரசாந்தி, அபிஅருள் செல்வி, கண்மி, சாலினி, திருமகள், அர்ச்சனா, கயல்ஜானகி, மாரீஸ்வரி, வேணுப்பிரியா ஆகியோர் சீலையம்பட்டியில் விவசாயிகளை சந்தித்து ரோஜாவில் இடை உழவுப்பணி பற்றி விவரித்தனர்.
மதுரை வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய மாணவி அக்ஷிதா உத்தமபாளையம் ராயப்பன்பட்டியில் திராட்சையை தாக்கும் மீலி பக் எனும் நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி விளக்கினார்.

