/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2024 05:18 AM

போடி: போடியில் இருந்து கிராம பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் தினமும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
போடி அருகே மீனாட்சிபுரம் விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், காமராஜபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போடி வந்து படித்து செல்கின்றனர்.
போடி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து மீனாட்சிபுரம், பத்திரகாளிபுரம் வழியாக தேனிக்கும், தேனி டெப்போவில் இருந்து உப்புக்கோட்டை வழியாக போடிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரிகள் முடிந்த பின் மாலை 4:55 மணி, 5:35 மணிக்கு போடியில் இருந்து கிராமம் மார்க்கமாக தேனிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள், பொதுமக்கள் 40 நிமிடம் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டியுள்ளது. மாலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் உள்ளே வரும் முன்பே காத்திருக்கும் மாணவர்கள் ஓடி பஸ்சில் முண்டியத்து இடம் பிடித்து பயணம் செய்கின்றனர்.
வேகமாக வரும் பஸ்சில் ஓடிஏறும் போது அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
குறிப்பாக டி.எண் : 57.- 2021 அரசு பஸ்சில் பயணிகள் உட்காரும் இருக்கை ஒட்டிய சைடு கதவுகள் இன்றி திறந்த வெளியாக உள்ளது.
அதன் வழியாக மாணவர்கள் ஏறி,இறங்குவதும் ஆக உள்ளனர். பஸ்சில் நிற்க கூட இடம் கிடைக்காத நிலையில் பொது மக்கள் கடும் நெரிசலில் பயணம் செய்கின்றனர்.
இதனால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனை அரசு போக்குவரத்து நிர்வாகம், போலீசாரும் கண்டு கொள்வது இல்லை.
அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி நேரங்களில் கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.