/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சை நிலையத்தில் மாணவிகள் ஆய்வு
/
திராட்சை நிலையத்தில் மாணவிகள் ஆய்வு
ADDED : ஏப் 05, 2025 05:36 AM
கம்பம்: ஊரக தோட்டக் கலைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திருச்சி தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் இப்சிதாமகன்தா, ஜெயஸ்ரீ, காஞ்சனா, கரணிப்ரியா, காவியா ஸ்ரீ, கீர்த்தி, நள்ளி, கனிஷ்கா ஆகியோர் ஆனைமலையன் பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் திராட்சை கொடிகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது, தட்ப வெப்ப நிலை மாற்றம் விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, திராட்சை குச்சிகள் வழங்குவது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ரகம், என்னென்ன ஆராய்ச்சிகள் பற்றி முனைவர் ஜெகதீஷ்வரியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
விவசாயிகளை சந்தித்து, சாகுபடி பிரச்னைகளை கேட்டனர். மேலும் புதிய ரகம், கவாத்து காலம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர்.

