UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டி அருகே ள்ள கோட்டூரில் அரசு உதவி பெறும் ஆதிதிராவிடர் தொடக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் செந்தில்குமாரை வேறு ஒரு அரசுப் பள்ளிக்கு மாற்றி டி.இ.ஓ., உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்ந்த வலியுறுத்தியும் பள்ளி நுழைவாயில் முன் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் பேபிஷாலினி தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் சுப்புலட்சுமி, அஞ்சுகம், பள்ளி செயலாளர் ரத்தினம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆதி திராவிடர் பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.
