/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயிலில் சகலகலா வல்லி மாலை பாடலில் மாணவிகள் பங்கேற்பு
/
கோயிலில் சகலகலா வல்லி மாலை பாடலில் மாணவிகள் பங்கேற்பு
கோயிலில் சகலகலா வல்லி மாலை பாடலில் மாணவிகள் பங்கேற்பு
கோயிலில் சகலகலா வல்லி மாலை பாடலில் மாணவிகள் பங்கேற்பு
ADDED : அக் 12, 2024 05:14 AM

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் சைவ சித்தாந்த பன்னிரு திருமுறை பயிற்சி மையம் சார்பில் சகலகலா வல்லி மாலை பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
குமரகுருபரர் சுவாமிகள் சரஸ்வதி அம்மனை நோக்கி பாடிய பாடல்கள் பிரசித்தி பெற்றவை. காசியில் மடம் கட்ட இடம் தேவைப்பட்டது.
குமரகுருபரருக்கு மொகலாய மன்னர் தனது மொழியில் பாடிக்காட்டினால் இடம் தருகிறேன் என்றார். இந்துஸ்தானி மொழியில் குமரகுருபரர் சரஸ்வதி அம்மனை நோக்கி பாடியுள்ளார். அவரது திறமையை பார்த்து வியந்த அரசர், மடம் கட்ட இடம் தந்துள்ளார்.
இன்றைக்கும் காசியில் குமரகுருபரர் மடம் உள்ளது. சரஸ்வதி பூஜையன்று அந்த பாடல்களை பாடுவது சிறப்பாகும்.
நேற்று கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் சைவ சித்தாந்த பன்னிரு திருமுறை பயிற்சி மையம் சார்பில் சகலகலா வல்லி மாலை பாடும் நிகழ்ச்சி நடந்தது. 50 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளர் ராமனாதன், நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி இணை செயலர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது. சிவ மடம் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாடிய மாணவிகளுக்கு சுகுமாறன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பாளர் ராமனாதன், சிவமடம் ராமகிருஷ்ணன், அடியார்கள் உமா மகேஸ்வரி, உமா தேவி கீதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

