/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதி பெறாமல் ஆரம்ப பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை சேர்க்கை 'எமிஸ் ஐ.டி.,' இன்றி படிக்கும் மாணவர்கள்

ADDED : ஜூன் 24, 2025 03:26 AM
தேனி: போடி மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், உரிய அனுமதி, எமிஸ் ஐ.டி., இன்றி 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 45 மாணவர்கள் படிக்கின்றனர்.
அவர்களுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்காமல் பரிந்துரை கடிதம் வழங்குவதாக பெற்றோர் மாரியப்பன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் போடி மீனாட்சிபுரம் மாரியப்பன், அவரது மகனுடன் வந்து மனு அளித்தார்.
மனுவில், 'அப்பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி எனது மகன்கள் மனோஜ் 6ம் வகுப்பு, ஹரிபிரிசாத் 7ம் வகுப்பு படித்தனர். மகன்களை வேறு பள்ளிகளில் சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியையிடம் மாற்றுச்சான்றிதழ் கேட்ட போது, 'பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் பெறவில்லை.
அதனால் மாணவர்களுக்கு எமிஸ் ஐ.டி., வழங்கவில்லை,' என கூறி மாணவரை வேறு பள்ளியில் சேர்க்க பரிந்துரை கடிதம் வழங்கினார்.
மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
இப்புகார் பற்றி தொடக்க பள்ளி டி.இ.ஓ., நாகலட்சுமி கூறுகையில், 'இப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அனுமதி கேட்டு மூன்று ஆண்டுகளாக இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்படுகிறது.
ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அப்பள்ளியில் 6,7,8 படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
அனுமதியில்லாத பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர், இவர்களுக்கு அரசின் இலவச புத்தகங்கள் எப்படி வழங்கப்படுகிறது என கேட்டவுடன் விசாரித்து கூறுவதாக தெரிவித்தார்.
அதன்பின் அந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை மட்டும் மாணவர்கள் படிப்பதாக பி.இ.ஓ., கூறுகிறார். நேரில் ஆய்வு செய்து பதில் கூறுவதாக டி.இ.ஓ., தெரிவித்தார்.