/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்கள்
/
பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்கள்
ADDED : அக் 18, 2024 05:47 AM
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் விழா பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.
பள்ளி மாணவிகள் பிரிவில் வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிஷ்மா, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அரவிந்த், தேனி டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா பள்ளி மாணவி லத்திகா முதல் மூன்று இடங்களை வென்றனர். மார்க்கையன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ம்ரிதா, அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுதர்சன் சிறப்பு பிரிவில் பரிசு வென்றனர்.
கல்லுாரி பிரிவில் வீரபாண்டி சவுராஸ்டிரா கல்லுாரி மாணவர் சங்கர், ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவி சுருதி, கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி மாணவி மெரினாஜென்சி முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.போட்டிகளை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ ஒருங்கிணைத்தனர்.