/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'கிக் பாக்சிங்' மாநில போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்
/
'கிக் பாக்சிங்' மாநில போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்
'கிக் பாக்சிங்' மாநில போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்
'கிக் பாக்சிங்' மாநில போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்
ADDED : ஆக 09, 2025 03:59 AM

ஆண்டிபட்டி: மத்திய அரசின் 'கேலோ இந்தியா அஸ்மிதா' மகளிர் கிக் பாக்சிங் மாநில போட்டி சென்னை கீழ்ப்பாக்கம் நேரு பார்க்கில் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகளில் சப் ஜூனியர் பிரிவில் கிருபா ஸ்ரீ, வசுமதி தங்கப்பதக்கம் வென்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் ரிகாஸ்ரீ, யாழினி ஆகியோர் வெள்ளி பதக்கமும், சம்சிதா, இந்துஜா ஆகியோர் வெண்கல பதக்கமும், ஜூனியர் பிரிவில் காவியா வெண்கல பதக்கமும் பெற்றனர்.
சீனியர் பிரிவு மாணவிகள் நிர்மலா, சம்யுக்தா, அஸ்வதி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கன்னியப்பபிள்ளைபட்டியில் பாராட்டு விழா நடந்தது.
தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன், செயலாளர் மற்றும் பயிற்சியாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர் ஜெயவேல் ஆகியோர் பதக்கம் பெற்ற மாணவிகளை பாராட்டினர்.