ADDED : ஆக 18, 2025 03:09 AM
பெரியகுளம் : சமரசம் பேச வந்த இடத்தில் மருமகன் நிரஞ்சனை தாக்கிய மாமனார், மாமியார் உட்பட 5 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகா ஜங்கல்பட்டி மேற்கு தெரு நிரஞ்சன் 33. இவருக்கும் கடமலைக்குண்டைச் சேர்ந்த பெருமாள்சாமி மகள் யாழினிக்கும் 29, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி கருத்து வேறுபாட்டில் பிரச்னையில், யாழினி 2 ஆண்டுகளாக பெற்றோருடன் உள்ளார். தேனி குடும்பநல நீதிமன்றத்தில் நிரஞ்சன் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் தென்கரையில் கோயிலில் வைத்து, இரு குடும்பத்தினரும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். சிவா, பிரசன்னா, சூர்யா, பெருமாள்சாமி மனைவி ராணி ஆகியோர் நிரஞ்சனையும், இவரது சித்தப்பா ரமேஷையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். நிரஞ்சன் புகாரில் தென்கரை போலீசார் பெருமாள்சாமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.--