ADDED : பிப் 23, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்ககோரி 4 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம், மற்றும் சப்- கலெக்டரிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் மூன்று கிராம மக்களும் சப்--கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஆர்.டி.ஓ., முத்துமாதவன், அரசு தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் கலைந்து சென்றனர்.
--