/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் சப்-கலெக்டர் வேண்டுகோள்

ADDED : நவ 21, 2025 05:12 AM
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கமிஷனர் பார்கவி தலைமை வகித்தார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
சப் கலெக்டர் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்த பணி விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. அரசியல் கட்சி ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் பி.எல்.ஏ., 2 ஒவ்வொருவரும் தங்களது கட்சி சார்பில் 50 படிவங்கள் பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்களிடம் வழங்க வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாத நிலை உள்ளது.
அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை விரைந்து முடிக் க வேண்டுகோள் விடுத்து வருகிறோம் பணிகளை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். வாக்காளர் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாத நிலையில் கல்லுாரி மாணவிகள், தன்னார்வலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர் அவர்களும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.