/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஞ்சமி நில சட்ட விரோத கட்டுமானம் அகற்ற சப் கலெக்டர் நோட்டீஸ்
/
பஞ்சமி நில சட்ட விரோத கட்டுமானம் அகற்ற சப் கலெக்டர் நோட்டீஸ்
பஞ்சமி நில சட்ட விரோத கட்டுமானம் அகற்ற சப் கலெக்டர் நோட்டீஸ்
பஞ்சமி நில சட்ட விரோத கட்டுமானம் அகற்ற சப் கலெக்டர் நோட்டீஸ்
ADDED : ஆக 20, 2025 06:58 AM

தேனி :தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பஞ்சமி நிலத்தில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள், தகரசெட்டுகளை அகற்ற பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் உத்தரவிட்டுள்ளார்.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே சுமார் 3 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதனை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்க கோரி சில மாதங்களுக்கு முன் போரட்டம் நடந்தது.
இந்நிலையில் சிலர் அந்த பகுதியில் கட்டுமானபணிகள், தகர செட்டுகள் அமைத்தனர்.
கடந்த மாதம் அந்த பகுதிக்கு சென்ற மற்றொரு தரப்பினர் கட்டுமானங்களை சேதப்படுத்தினர்.
அங்கு தொடர் மோதல் ஏற்படுவதை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் பஞ்சமி நிலத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மேற்கொண்ட கட்டுமானங்கள், தகர செட்டுகளை அகற்ற வேண்டும்.
அகற்றும் பணியை நகராட்சி கமிஷனர் தாசில்தார் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும்.
ஆட்சேபனை இருப்பவர்கள் எழுத்து பூர்மவாக தெரிவிக்கலாம் என பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவு நகலை பிரச்னைக்குரிய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தகர செட்டுகள்,கட்டுமானங்களில் வருவாய்த்துறையினர் ஒட்டி உள்ளனர்.