ADDED : செப் 15, 2026 07:45 PM
தேனி, செப். 16–தோட்டக்கலைத்துறை சார்பில் களை தடுப்பு பாய் (weed barrier mat), பறவை தடுப்பு வலை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியின் போது களை வளர்ந்து பயிர் வளர்ச்சி பாதிப்படைவதை தவிர்க்க களை தடுப்பு பாய்கள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 3ஆயிரம் ச.மீ.,கள் களை தடுப்பு பாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாய்கள் 50 சதவீத மானியத்தில் ச.மீ.,க்கு ரூ.25 வழங்கப்படும். திராட்சை உள்ளிட்ட பயிர்களை பறவைகள் சேதப்படுத்துவதை தடுக்க பறவை தடுப்பு வலை பயன்படுகிறது. இந்த தடுப்பு மாவட்டத்தில் 10 ஆயிரம் ச.மீ., வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. களை தடுப்பு பாய், பறவை தடுப்பு வலை தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றனர்.
