/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்காச்சோள சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருட்கள்
/
மக்காச்சோள சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருட்கள்
ADDED : செப் 03, 2025 01:07 AM
போடி : போடி வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. எக்டேர் ஒன்றிற்கு 10 கிலோ மக்காச்சோள விதை, ஒரு லிட்டர் உயிர் உரங்கள், 12.5 கிலோ அங்கக உரம், அரை லிட்டர் நானோ யூரியா போன்ற இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 ஏக்டேர் வரை பயன் அடையலாம்.
இதற்கான இடுபொருட்கள் போடி வேளாண் அலுவலகம், உப்புக்கோட்டை, கோடாங்கிபட்டி, சிலமலை துணை வேளாண் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மக்காச்சோளம் பயிரிட விரும்பும் விவசாயிகள் மானியத்தில் இடுபொருட்கள் பெற ரேஷன் கார்டு, ஆதார் நகலுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.