/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம்
/
தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம்
ADDED : ஆக 14, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: விவசாயிகள் பயன் பெறும் வகையில் தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிலத்தை சமன் படுத்துதல், முட்புதர்கள் அகற்றி, விவசாயம் செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ள விவசாயிக்கு ஏக்கருக்கு 50 சதவீதம் மானியம் போக ரூ.3840 வழங்கப் படுகிறது. உப்புக்கோட்டை, ராசிங்காபுரம் பகுதி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தங்களது ரேஷன் கார்டு, ஆதார், சிட்டா, அடங்கல் நகல், போட்டோவுடன் போடி வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.