/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாசிப்பயறு உற்பத்தியை பெருக்கிட மானியம்
/
பாசிப்பயறு உற்பத்தியை பெருக்கிட மானியம்
ADDED : ஜூன் 28, 2025 12:44 AM
போடி: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு சாகுபடி செய்திட 50 சதவீத மானியத்தில் பயறு விதைகள் வழங்கப்படுகிறது என போடி வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
போடி அருகே விசுவாசபுரம், முந்தல், மேலப்பரவு உள்ளிட்ட பகுதிகளில் சோளம் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடைக்கு பின் விவசாயிகள் பயறு உற்பத்தியை பெருக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் சி.ஓ., - 9 பாசிப்பயறு விதை வினியோகம் செய்யப்பட உள்ளது.
பயறு விதைகள் வேளாண்மை அலுவலகத்தில் போதுமான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கிலோவிற்கு ரூ. 85 செலுத்தி விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மானாவாரி விதைப்புக்கு தேவையான உளுந்து, தட்டை பயறு, குதிரைவாலி, கம்பு போன்ற விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கிடும் வகையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மானியத்தில் பயறு விதைகள் பெற்று பயன் அடையுமாறு போடி வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.