ADDED : ஜன 31, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்; கம்பத்தில் வட்டார போக்குவரத்து துறை, டிராபிக் போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தினர். வாகன ஆய்வாளர் சுந்தர் ராமன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.
பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, மெயின் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்களின்றி இயங்கியதாக 10 ஆட்டோக்களுக்கு அபராதம் ரூ.10,575 விதிக்கப்பட்டது. இந்த சோதனை அனைத்து ஊர்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

