/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
ரோட்டில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 01, 2024 07:23 AM

போடி: போடி தேவாரம் செல்லும் ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் விபத்து ஏற்படும் நிலையில் திடீர் என ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த மெயின் ரோட்டில் நேற்று இரவு திடீர் என விரிசலுடன் அரை அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை என்பதால் சீரமைப்புப் பணிகள் செய்திட பணியாளர்கள் வரவில்லை. இதனால் பள்ளம் அருகே பேவர் பிளாக் கற்களை வைத்தும், எச்சரிக்கைக்காக சிவப்பு துணியை கட்டி வைத்து உள்ளனர்.
பள்ளம் அமைந்துள்ள பகுதி தேவாரம் மெயின் ரோடு மட்டும் இன்றி கரட்டுப்பட்டி செல்லும் இணைப்பு ரோடாகவும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வேகமாக வரும் நபர்களுக்கு பள்ளம் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
பெரிய அளவில் வாகன விபத்துக்கள் ஏற்படும் முன் விரிசலுடன் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.