ADDED : செப் 30, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், சண்முகசுந்தரம் ஊராட்சிக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது.
வைகை அணை அருகே கரட்டுப்பட்டியில் பம்பிங் செய்யப்படும் நீரை குழாய் மூலம் கொண்டு சென்று கரிசல்பட்டி அருகே தரைமட்ட தொட்டியில் தேக்கி, பின் அங்கிருந்து கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் விநியோகம் பாதித்துள்ளது. பொதுமக்கள் குடிநீர் விநியோக பாதிப்பு குறித்து புகார் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.