UPDATED : அக் 28, 2026 04:38 PM
ADDED : அக் 28, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக ரோட்டின் இரண்டு புறமும் நெடுஞ்சாலைத் துறையினர் வேகத் தடைகளை அமைத்துள்ளனர்.
இதனால் மருத்துவமனையில் இருந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களில் வரும் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். திட்டமிடப்படாத திடீர் வேகத் தடையால் பொதுமக்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
