ADDED : ஏப் 11, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சின்னராஜ் 43. இவரது மனைவி சங்கீதா 35. சின்னராஜ் உரக்கடையில் விற்பனையாளராக இருந்தார்.
ஏப்.9ல் வேலைக்கு சென்ற சின்னராஜ், மனைவியிடம் 'அலுவலத்தில் இருந்து ஒரு நபர் வருவார், அவரை தேனியில் லாட்ஜ்யில் தங்க வைக்க வேண்டும்', என கூறி சென்றார்.
அதன்பின் மனைவியிடம் கணவர் அலைபேசியில் பேசவில்லை. உறவினர் மணிகண்டனிடம் கணவரை பார்த்து வர கூறினார். மணிகண்டன் சம்மந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று அறையை தட்டிய போது திறக்க வில்லை. மேலாளர் அனுமதியுடன் கதவை உடைத்து பார்த்த போது, சின்னராஜ் கட்டிலில் இறந்து கிடந்தார். மனைவி சங்கீதா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

