sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை

/

மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை

மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை

மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை


ADDED : ஏப் 05, 2025 05:37 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: மாவட்டத்தில் கோடை வெயிலை விரட்டும் வகையில் தொடர்ந்து கோடை மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயிலின் தாக்கம் நீடித்தது.

இதனால் மதியம் ரோடுகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. காலையிலே இவ்வளவு கடுமையாக வெயில் தாக்கம் இருப்பதாக மக்கள் புலம்பினர்.

வெயிலின் தாக்கத்திற்கு ஆறுதலாக ஏப்.2, ஏப். 3 மாவட்டத்தில் பரவலாக இரவில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியது.

இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு பெரியகுளத்தில் சாரல் மழையாக வந்த அடுத்து 10 நிமிடத்தில் கனமழையாக மதியம் 1:20 வரை கனமழை பெய்தது. மாலையிலும் கனமழை தொடர்ந்தது.

இதனால் கோடைவெயிலின் தாக்கம் குறைந்தது. மாலையில் தேனியில் விட்டு, விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்பத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு பெய்த மழை இரவு 7:00 மணிவரை தொடர்ந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது இதனால் மெயின்ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us