/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'
/
காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'
காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'
காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 26, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, சிசு இறப்புக்கு காரணமான காதலனை, போடி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25; மகளிர் சுய உதவி குழு கடன் வசூலிப்பு ஊழியர். அப்போது, இவருக்கும், போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
இதில், கருவுற்ற பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட வைத்துள்ளார். கேட்ட போது, ஜாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். போடி தாலுகா போலீசார் ஹரிஹரனை நேற்று கைது செய்தனர்.