/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு
/
சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு
சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு
சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு
ADDED : அக் 19, 2024 04:49 AM

கூடலுார் : கூடலுாரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் ரோடு சேதமடைந்து வருகிறது.
கூடலுாரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி வழியாக சுருளி அருவிக்கு 9 கி.மீ., தூர ரோடு உள்ளது. இதன் துவக்கப் பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் ரோடு அடிக்கடி குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. மேலும் விளைநிலங்களுக்கு அதிகமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. கழிவுநீரோடை வசதி ஏற்படுத்த பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் இப்பகுதியில் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தும்.

