/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் கணக்கெடுக்கும் பணி
/
ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் கணக்கெடுக்கும் பணி
ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் கணக்கெடுக்கும் பணி
ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் கணக்கெடுக்கும் பணி
ADDED : மே 23, 2025 11:52 PM
போடி: மாவட்டத்தில் ரோட்டோரம் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டி -சிந்தலைச்சேரி, முத்தையன்செட்டிபட்டி, திம்மிநாயக்கன்பட்டி உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் ரோட்டோரம் தடுப்புச் சுவர் இன்றி, திறந்த வெளி கிணறுகள் அமைந்து உள்ளன. ரோட்டில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவில் வாகனங்கள் செல்லும் போது கிணறு இருக்கும் இடம் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கிணறு அமைந்துள்ள ரோட்டோர பகுதியில் பாதுகாப்பிற்காக தடுப்புச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே 8 நபர்களுடன் சென்ற கார் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில் 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதை தொடர்ந்து ரோட்டோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதே போல் உள்ளாட்சி நிர்வாகங்களும் மெயின் ரோட்டில் பாதுகாப்பு இல்லாத கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.