/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்ற இடமாற்றம் நிறுத்தி வைப்பு
/
நீதிமன்ற இடமாற்றம் நிறுத்தி வைப்பு
ADDED : ஜூலை 27, 2025 12:24 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற இடமாற்றம் உத்தரவை நிறுத்தி வைத்த, உயர்நீதிமன்றம் நீதிபதிகளுக்கு நன்றி தெரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் அம்பாசங்கர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் ஞானகுருசாமி,தாமரைச்செல்வன், சிவசுப்பிரமணியன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தலைவர் கூறுகையில்: பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் உத்தரவு கடந்த வாரம் வந்தது. ஜூலை 22ல் நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறுநாள் (ஜூலை 23) ல், தலைவர் மற்றும் நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, உயர்நீதிமன்றம் பதிவாளர் அல்லி, உயர்நீதிமன்றம் தேனி மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜோதிராமன், சட்ட அமைச்சர் ரகுபதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனால் இடமாற்றம் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. எனவே உயர்நீதிமன்றம் நீதிபதிகள், அமைச்சர், தங்கத்தமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.-