/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதுவாக்குடி மலைக்கிராம பள்ளிக்கு செல்லாத ஆசிரியை ' சஸ்பெண்ட் '
/
முதுவாக்குடி மலைக்கிராம பள்ளிக்கு செல்லாத ஆசிரியை ' சஸ்பெண்ட் '
முதுவாக்குடி மலைக்கிராம பள்ளிக்கு செல்லாத ஆசிரியை ' சஸ்பெண்ட் '
முதுவாக்குடி மலைக்கிராம பள்ளிக்கு செல்லாத ஆசிரியை ' சஸ்பெண்ட் '
ADDED : ஜூலை 27, 2025 12:25 AM
போடி: போடி அருகே முதுவாக்குடி மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு பணிக்கு செல்லாத ஆசிரியை மகாலட்சுமி ' சஸ்பெண்ட் ' செய்யப்பட்டார்.
போடி ஒன்றியம் , கொட்டக்குடி ஊராட்சி, முதுவாக்குடி மலைக் கிராமத்தில் முதுவார் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விளைபொருளை கொண்டு வரவும், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதி பெற 4 கி.மீ., தூரம் உள்ள குரங்கணி அல்லது 20 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு வர வேண்டும்.
முதுவாக்குடியில் இருந்து சாம்பலாறு வரை ரோடு ஜீப், டூவீலரில் செல்லும் வகையில் ரூ.1.67 கோடி செலவில் 3 கி.மீ., தூரம் கல்பாவுதல் பணி நடந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர் என இருவர் பணியாற்றினர். 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.
சமீபத்தில் தலைமையாசிரியர் கவுன்சிலிங்கில் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றார். இங்கு பணியில் உள்ள ஆசிரியை மகாலட்சுமி பள்ளிக்கு செல்லாததால் பள்ளி பூட்டப்பட்டு இருந்தது. இதனால் குழந்தைகளை 4 கி.மீ., தூரம் உள்ள குரங்கணி அரசு ஆரம்ப பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர். பள்ளிக்கு ஆசிரியர்கள் வராதது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பள்ளிக்கு ஆசிரியை செல்லாதது உறுதியானது. இந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் நாகலட்சுமி ஆசிரியை மகாலட்சுமியை 'சஸ்பெண்ட் ' செய்து உத்தரவிட்டார். தற்போது அப்பள்ளிக்கு வேறு ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.