/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூஜ் பெஹர் கிரிக்கெட் போட்டி டெல்லியை வீழ்த்திய தமிழக அணி காலிறுதியில் பஞ்சாப் அணியுடன் மோதல்

ADDED : டிச 18, 2024 07:23 AM

தேனி : தேனியில் நடந்த கூஜ்பெஹர் கிரிக்கெட் டிராபி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது.
தேனியில் டிச.,22 நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு 'கூஜ் பெஹர்' டிராபி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியும் நான்கு நாட்கள் நடத்தப்படும். தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழகம்-டெல்லி அணிகள் மோதின. முதல் இருநாட்கள் மழை, ஆடுகளத்தில் ஈரம் காரணமாக போட்டிகள் நடக்கவில்லை.
மூன்றாம் நாள் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தமிழக அணி 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. தமிழக அணி 247 ரன்கள் எடுத்தது.டெல்லி அணி 2வது இன்னிங்சில் 44 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தமிழக வீரர் கிஷோர் 4 விக்கெட் வீழ்த்தினார்.தமிழக அணி 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் 2வது இன்னிங்சை துவங்கி, 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு இன்னிங்சில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் கிஷோர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தமிழக அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் டிச.,22 துவங்கும் காலிறுதி போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.