sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்: அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி

/

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்: அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்: அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி

தமிழக பட்ஜெட்; ஆதரவும், எதிர்ப்பும்: அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி


ADDED : பிப் 20, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் ஒருசேர கொண்ட கலவை பட்ஜெட்டாக உள்ளது. தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு போதிய திட்டங்கள் இல்லை, தொழில் வர்த்தகத்திற்கு இணக்கமான பட்ஜெட்டாக இல்லை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற எதிர் கருத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள், ஏரிகள், குளங்கள் சீரமைப்பு, சாலை மேம்பாடு, குடிசை ஒழிப்பு என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

பட்ஜெட் குறித்து மதுரையில் பல்வேறு தரப்பினரும் கூறிய கருத்துக்கள்...

உயர் கல்வி படிக்கும் மாணவிகள் அதிகரிப்பு


பி.செல்வராணி, இல்லத்தரசி, பொம்மையக் கவுண்டன்பட்டி, தேனி:

மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13 ஆயிரத்து 720 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பெண்கள் மகிழ்ச்சி அடைவர். மகளிர் உரிமைத் தொகை சரியான ஏழை பெண்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ‛விடியல் பயணம்' திட்டம் கொடைக்கானல், நீலகிரியில் அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. ‛புதுமை பெண்' திட்டம் அறிமுகம் படுத்திய பின், உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. கூடுதலாக 34 ஆயிரத்து 460 மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. ‛நடப்பாண்டில் இத்திட்டத்தை விரிவு படுத்தி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் திட்டம் பயன்படும் என்பதால், கூடுதலாக ரூ.370 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். விடியல் பயணம் திட்டத்தில் ஓட்டை உடைசலாக பஸ்கள் உள்ளன. பொது போக்குவரத்து பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்


பேயத்தேவன், மாவட்ட தலைவர், அரசு ஊழியர் சங்கம். தேனி.

பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஏதாவது அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பிப்.,19க்குள் நல்ல அறிவிப்பு வரும் என ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் சந்திப்பில் கூறியிருந்தார். இந்த பட்ஜெட் தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்பு பட்ஜெட் ஆகும். இதில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என அறிவித்திருந்தசால் கூட நன்றாக இருந்திருக்கும். அதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இளைஞர்களுக்கு அரசு பணி வரவேற்பு


மாலதி, உதவி பேராசிரியை,நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரி,தேனி. பட்ஜெட்டில் அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப்பணி என்பது வரவேற்க்கதக்கதாகும். ஐநுாறுக்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களை பணி அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நுாறு கலை, பொறியியல் கல்லுாரிகளில் ரூ.200 கோடி மதிப்பிலான திறன் ஆய்வகங்கள் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடியில் 15ஆயிரம் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அறிவிப்புகள் கற்றல் திறன் மேலும் அதிகரிக்கும். தமிழ்மொழியை செயற்கை நுண்ணறிவு மூலம் நவீனபடுத்துவது மகிழ்ச்சி. முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் தமிழகத்தில் வறுமை இல்லாத நிலையை உருவாக்க இயலும். வரவேற்க தக்க பட்ஜெட்தான்.

ஓட்டல் தொழில் வளர்ச்சிக்கு ஏதுமில்லை


ராஜேந்திரன், செயலாளர், ஒட்டல் உரிமையாளர்கள் சங்கம், - கம்பம்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 2.2 சதவீதம் குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் வரவேற்க தக்கது. விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு உடனே சிகிச்சையளிக்க ரூ. ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தியதும் பரவாயில்லை. பூகம்பம், வானிலை தகவல்களை முன்கூட்டியே அமைக்கும் 'சி - டோப்ளர் ரேடார்' மேகமலையில் அமைக்காதது ஏமாற்றம். ஒலிம்பிக் அகாடமி அமைப்பது விளையாட்டை ஊக்குவிக்கும். காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்திருப்பது சிறப்பு. பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களை வேலையில் அமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு 10 சதவீத சம்பள மானியம் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். ஒட்டல் தொழில் வளர்ச்சிக்கு அறிவிப்புக்கள் ஏதும் இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம். குறைந்தபட்சம் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சலுகை அறிவிப்பு செய்ய பரிந்துரை செய்திருக்கலாம்.

விசைத்தறி தொழிலுக்கு ஏமாற்றம்


அய்யனார், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தி விற்பனையாளர் சங்கம் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி: பட்ஜெட்டில் விசைத்தறி தொழிலை ஊக்குவிப்பதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கூலிப் பிரச்னை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, வியாபார மந்த நிலையால் தொழில் நசிந்து விட்டது. சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் வங்கியில் பெரும் மூலதன கடனுக்கு வட்டி மானியம், அரசு மானிய விலையில் நூல் கிடைக்கச் செய்தல் போன்ற திட்டங்களை விசைத்தறி நெசவாளர்கள்,உற்பத்தியாளர்கள் பட்ஜெட் அறிவிப்பில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். கான்கிரீட் வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு இத்திட்டத்தில் வீடு ஒதுக்கீடு தர வேண்டும்.

வணிகர்களுக்கு சலுகை இல்லை


காளிமுத்து, வர்த்தகர், போடி : விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு, ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வரவேற்கும் வகையில் உள்ளது. படித்த இளைஞர்களுக்கு 10 ஆயிரம் பணியிடங்கள், 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புதல், கிராம ரோடு வசதிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு, ரூ. 500 கோடி செலவில் குளங்கள், சிறு பாசன ஏரிகள், வரத்து கால்வாய்கள் புதுப்பிக்க இருப்பது விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும். வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பது, வியாபாரிகள், வணிகர்களுக்கு சலுகை இல்லாதது ஏமாற்றும் அளிக்கிறது.

தொழில் துறையில் மகளிர் பங்களிப்பு அதிகரிக்கும்


--

வைரமணி, தொழில்முனைவோர், பெரியகுளம்.

பத்தாயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் திட்டத்தின் வாயிலாக தொழில்வளத்தில் மகளிர் பங்களிப்பு அதிகரிக்கும். தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், ஆயிரம் பேருக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கியதால் இளைஞர்களுக்கு போட்டித்தேர்வு எழுத ஊக்குவித்தும், தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிக்கு அதிக அளவில் செல்வர். ரூ.500 கோடியில் 5000 நீர்நிலைகள் புனரமைப்பு திட்டத்தில், கோயில் புனரமைப்பு திட்டத்தில் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட சில கோயில்களில் பணி துவங்க வேண்டும்.

கல்விக்கு முக்கியத்துவம்


கனிமலர், குடும்பத்தலைவி, கூடலுார்.

பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. தற்போதய நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது அதிகமாக இருந்தது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கும் பள்ளி கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை அமைக்க ரூ.300 கோடி, இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி போன்றவை வரவேற்கக் கூடியது. மதுரைக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. சிலப்பதிகாரம் மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கக் கூடியதாகும்.






      Dinamalar
      Follow us