/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக கால்பந்து அணி போடியில் பயிற்சி
/
தமிழக கால்பந்து அணி போடியில் பயிற்சி
ADDED : அக் 31, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:  தேசிய அளவிலான 14 வயதிற்குட்பட்டோருக்கான சப்ஜூனியர் கால்பந்து போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவ.,3 துவங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணி போடி இசட். கே.எம்., பள்ளியில் கடந்த சில நாட்களாக தங்கி பயிற்சி பெற்றுவந்தனர்.
பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து கழகத்தினர் செய்திருந்தனர். பயிற்சி நிறைவடைந்து சத்தீஸ்கர் புறப்பட்ட வீரர்கள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட கால்பந்து கழக தலைவர் கதிரேசன், செயலாளர் மனோகரன், நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

