/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டை ஓட்டுப்பதிவை தடுக்க தமிழக, கேரள போலீசார் ஆலோசனை -தேக்கடியில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு

ADDED : பிப் 19, 2024 05:26 AM
கூடலுார் : இரட்டை ஓட்டுப் பதிவைத் தடுக்க தமிழக கேரள, போலீசார் இணைந்து செயல்படுவது என தேனி, இடுக்கி மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையிலான இரு மாநில போலீசார்களின் கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேக்கடியில் தேனி எஸ்.பி., சிவப்பிரசாத், இடுக்கி எஸ்.பி., விஷ்ணு பிரதீப் தலைமையில் இரு மாநில போலீசாரின் கூட்டுக் குழு கூட்டம் நடந்தது.
தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே உள்ள முக்கிய வழித்தடமான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக போதைப் பொருள் கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும்.
தப்பி ஓடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இரு மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.
மேலும் தேர்தல் நேரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே இரட்டை ஓட்டுப்பதிவை தடுக்க இரு மாநில போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் இரு மாநில போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.