/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
/
ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு
ADDED : ஆக 04, 2025 04:40 AM
கம்பம்: ஹிரோஷிமா, நாகசாகி தின ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்டுதோறும் ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. இந்தாண்டு 4 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மணவர்கள் வெண்மை நிறத் தாளில் (A4 சீட்) போரின் விளைவுகள் - தாக்கம் பற்றி ஒவியம் வரைந்து அனுப்ப வேண்டும். 9ம் வகுப்பு முதல் முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ''யுத்தம் ஏன் வேண்டாம்'' என்ற தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். கல்லுாரி மாணவர்கள் ''எல்லை இல்லா உலகம்'' என்ற தலைப்பில் 20 வரிகளுக்கு மிகாமல் கவிதை அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மோதலில் இருந்து ஒத்துழைப்புக்கு: ஒரு புதிய சகாப்தம்'' என்ற தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை அனுப்பலாம்.
மாவட்ட அளவில் பங்கேற்கும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். முதல் 3 இடம் பிடிக்கும் படைப்புகள் மட்டுமே மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். படைப்புகளை ஆக.10க்குள் முத்துக் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹிரோஷிமா, நாகசாகி தின போட்டிகள் - 2025, 20/2 கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். சந்தேகங்களுக்கு 99440 94428 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.