/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூஜ் பெஹார் கிரிக்கெட் போட்டி தமிழகம் 272 ரன்கள் குவிப்பு
/
கூஜ் பெஹார் கிரிக்கெட் போட்டி தமிழகம் 272 ரன்கள் குவிப்பு
கூஜ் பெஹார் கிரிக்கெட் போட்டி தமிழகம் 272 ரன்கள் குவிப்பு
கூஜ் பெஹார் கிரிக்கெட் போட்டி தமிழகம் 272 ரன்கள் குவிப்பு
ADDED : நவ 17, 2025 12:11 AM

தேனி: தேனியில் நடந்து வரும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி 272 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 'கூஜ் பெஹார்' டிராபி (நான்கு நாள் போட்டி) நடத்தப்படுகிறது.
தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடந்த லீக் 'ஏ' போட்டி துவங்கியது. இதில் தமிழ்நாடு மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன.
போட்டிகளை தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். செயலாளர் லட்சுமணநாரயணன், அட்மின் மேலாளர் மகேஷ்ராஜா உடனிருந்தனர்.
டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 91.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக குஷ்பர்தியா 148 ரன்கள் எடுத்தார். நவீன் 47, சவின் 30 ரன்கள் எடுத்தனர். மத்திய பிரதேச வீரர் யஷ்பர்தன்சிங் சவுகான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

