/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லேப்டாப், ஐபோன் மாயம் தமிழக சுற்றுலா பயணி புகார்
/
லேப்டாப், ஐபோன் மாயம் தமிழக சுற்றுலா பயணி புகார்
ADDED : ஆக 31, 2025 04:17 AM
மூணாறு: தமிழகம் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜாபர்சாதிக், நண்பர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், மூலக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.
இந்நிலையில் ஜாபர்சாதிக் அறையை பூட்டிவிட்டு நண்பர்களுடன் ஆத்துக்காடு நீர்வீழ்ச்சியை காணச் சென்றார். அறைக்கு திரும்பியவர், அங்கு வைத்திருந்த லேப்டாப், விலை உயர்ந்த அலைபேசி (ஐபோன்), ஏ.டி.எம். உள்ளிட்ட கார்டுகள் ஆகியவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.81 லட்சம் எடுக்கப்பட்டதாக ஜாபர்சாதிக் வைத்திருந்த வேறொரு அலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது. அவர்,மூணாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.