/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
/
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
ADDED : அக் 03, 2025 03:11 AM

கூடலுார்: கேரளாவில் ஹோட்டல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் பலியாகினர்.
கேரளா, இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் இருந்து புளியன் மலை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது, ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதில், தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ஜெயராம், 38, கூடலுாரைச் சேர்ந்த சுந்தர பாண்டியன், 34, மைக்கேல், 36, ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ஜெயராம் இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் சத்தம் ஏதும் வராததால், அவரை பார்க்க சுந்தர பாண்டியனும், மைக்கேலும் தொட்டிக்குள் இறங்கினர். மூவரும் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி பலியாகினர். தகவலறிந்த கட்டப்பனை தீயணைப்பு துறையினர் மூவரது உடல்களையும் மீட்டனர்.