/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எழுத்துக்களின் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ் மொழி கவிஞர் யுகபாரதி பேச்சு

ADDED : ஆக 15, 2025 02:42 AM
தேனி: அனைத்து எழுத்துக்களுக்கும் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ்மொழிதான்'', என, தேனி அரசு மருத்துக் கல்லுாரியில் நடந்த தமிழ்கனவு நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி பேசினார்.
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்கனவு,- தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி பேசுகையில், ' தமிழகத்தில் கண்டறிந்த இரும்பின் தொன்மை குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வரலாறு இங்கிருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. தமிழ் மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. அனைத்து எழுத்துக்களுக்கும் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ்மொழி தான். தமிழ் மொழி சங்க இலக்கியங்களில் காகம் உள்ளிட்ட 40 வகையான உயிரினங்களின் கனவுகள் குறித்து கூறப்பட்டுள்ளன என்றார். பின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.