/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு
/
200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு
200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு
200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு
ADDED : டிச 05, 2024 06:27 AM
தேனி: மாவட்டத்தில் 200 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்திற்கு 400 மண்புழு உரம் தயாரிப்பு அலகுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் ஒரு உரதயாரிப்பு படுக்கை, ஒரு ஸ்டாண்ட், மண் புழுக்கள் இடம் பெற்றிருக்கும்.
இதன் மதிப்பு ரூ.6ஆயிரம் ஆகும். விவசாயிகளுக்கு 50சதவீத மானியத்தில் இவை வழங்கப்பட உள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் தலா 2 உர தயாரிப்பு அலகு வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 50 அலகுகள் வழங்கப்பட உள்ளது.
தோட்டம் அல்லது சொந்த இடத்தில் மண்புழு உரம் தயாரிக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.