/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
180 விவசாயிகளுக்கு மானியத்தில் 'ஸ்டார்டர்' கருவி வழங்க இலக்கு 'பம்ப் செட்'களை எளிதாக இயக்கலாம்

ADDED : நவ 10, 2024 04:56 AM
தேனி, : மாவட்டத்தில் 180 விவசாயிகளுக்கு செயலி மூலம் மோட்டார் இயக்கும் கருவி வழங்க உள்ளதாக வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை இரவில் ஆன், ஆப் செய்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க வேளாண் பொறியியல் துறை மின் மோட்டார்களில் 'ஸ்டார்டர் கருவி' பொருத்தும் திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இணைய வசதியுடன் இயங்கும் ஸ்டார்டர் கருவி, அலைபேசி செயலியுடன் இணைக்கப்படும்.
இந்த கருவியை குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து அலைபேசி செயலி மூலம் மின் மோட்டார் 'ஆன், ஆப்' செய்யலாம். மேலும் இந்த கருவியை ஒரே நேரத்தில் 4 பேர் வரை இயக்கலாம். இக்கருவி சோதனை முறையில், சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் 53 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியில் நல்ல பலன் கிடைத்ததின் அடிப்படையில் மாவட்டந்தோறும் நுாற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் ஸ்டார்டர் கருவி வழங்க வேளாண் பொறியியல் துறை முடிவு செய்துள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த ஸ்டார்டர் கருவி பொருத்த ரூ.14 ஆயிரம் செலவாகும். மானியமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். கருவி 4 வகைகளில் உள்ளது. கருவி பொருத்தும் பகுதியில் மின் இணைப்பு, இணைய வசதி முக்கியமாகும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 22 பேர் வீதம் மொத்தம் 180 விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். விருப்பமுள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள வேளாண் உதவி பொறியாளர் அலுவலகம் அல்லது தேனி வேளாண் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றனர்.