/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழைய ரோடுகளை தோண்டாமல் நகராட்சியில் தார்சாலை சீரமைப்பு
/
பழைய ரோடுகளை தோண்டாமல் நகராட்சியில் தார்சாலை சீரமைப்பு
பழைய ரோடுகளை தோண்டாமல் நகராட்சியில் தார்சாலை சீரமைப்பு
பழைய ரோடுகளை தோண்டாமல் நகராட்சியில் தார்சாலை சீரமைப்பு
ADDED : ஜூலை 03, 2025 12:25 AM
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சியில் பழைய ரோடுகளை தோண்டாமல் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தெருக்களில் உள்ள ரோடுகள் மீது மீண்டும், மீண்டும் ரோடு அமைப்பதால் ரோடு மேடாகவும், இருபுறமும் உள்ள வீடுகள் பள்ளமாகிறது. இந் நிலையை தவிர்க்க உள்ளாட்சிகளில் பழைய ரோடுகளை புதுப்பிக்கும் முன் பழைய ரோட்டை தோண்டி அகற்றி விட்டு புதிய ரோடு அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அரசின் உத்தரவை பின்பற்றாமல் பெரியகுளம் நகராட்சியில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தென்கரை வடக்கு, தெற்கு அக்ரஹாரம், சுப்பையா தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, பட்டாளம்மன் கோயில் தெரு, வடகரை வைத்தியநாதபுரம், வடக்கு பாரஸ்ட் ரோடு பகுதிகளில் 2 கி.மீ.,நீள தார்ரோடு ரூ.1.54 கோடியில் பழைய ரோட்டை தோண்டாமல் அதன்மீது புதிய ரோடு அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து நகராட்சி பொறியாளர் சந்தோஷ்குமார் கூறுகையில், 'தார் சாலைகள் மேம்படுத்தும் திட்டம்
என்பதால் 4 முதல் 5 ஆண்டுகள் வரையிலான முந்தைய ரோடுகளை தோண்டாமல் பலப்படுத்தும் பணி நடக்கிறது,' என்றார்.-