/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை கோல்கட்டா அழைத்து சென்று டீ மாஸ்டர் பலாத்காரம் மூவர் போக்சோவில் கைது

ADDED : டிச 18, 2024 02:41 AM
தேனி:தேனி அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கோல்கட்டா அழைத்து சென்று 18 வயது டீ மாஸ்டர் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வாலிபர், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் அல்லிநகரத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் டீ மாஸ்டராக வேலை செய்தார். அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அடிக்கடி பஸ் ஸ்டாண்ட் வந்து சென்றார்.
இதில் டீ மாஸ்டருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சில மாதங்களாக காதலித்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து சிறுமி வெளியேறினார். சிறுமியின் பெற்றோர் புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் டீ மாஸ்டருடன் கோல்கட்டாவில் சிறுமி தங்கியிருப்பது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். சிறுமியை டீ மாஸ்டர் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது. அதையடுத்து டீ மாஸ்டர், அவருக்கு அடைக்கலம் கொடுத்த உசிலம்பட்டி துரைராஜபுரத்தை சேர்ந்த தம்பதி பாண்டி- ரேவதியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டீ மாஸ்டர், பாண்டி தேக்கம்பட்டி சிறையிலும், ரேவதி நிலக்கோட்டை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.