ADDED : ஜூன் 14, 2025 05:57 AM
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடந்தது.
செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார்.
முதல் நாள் பயிற்சியில் கற்பித்தல் செயல் திறனை மேம்படுத்துவதற்கான கருவிகள் என்ற தலைப்பில் நடந்தது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆசிரியரின் கற்பித்தல் திறனை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து சிவகாசி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் சிவக்குமார் பயிற்சி அளித்தார்.
இரண்டாவது நாள் மன அழுத்த மேலாண்மை குறித்தும், ஆசிரியரின் கற்பித்தல் திறன், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய இணக்கமான உறவு, ஆசிரியர்கள் மாணவர்களை அணுகும் முறை ஆகியவை குறித்து மதுரை மறுவாழ்வு நிறுவனத்தின் முதல்வர் குருபாரதி பயிற்சி அளித்தார். கல்லூரி விரிவுரையாளர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.