/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்வு பணியாற்றிய ஆசிரியர் போக்சோவில் கைது விசாரணை நடத்த ஆசிரியர் கழகம் கோரிக்கை

ADDED : மார் 21, 2025 02:50 AM
தேனி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு பணியாற்றிய ஆசிரியர் போக்சோவில் கைது, சஸ்பெண்ட் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, ஆசிரியர்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் தேர்வு பணி புரிந்த ஆசிரியர் மீது மாணவி புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 20பேர் தேர்வு எழுதிய அறையில் நெறிப்படுத்திய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு பணியை நேர்மையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் இச் சட்டத்தால் கைது செய்வது எதிர்மறை சூழலை உருவாக்கி உள்ளது. ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டு, மாணவர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் அளிப்பதாக உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்த கூறினால் கூட 'சிறைக்கு போக தயாரகி விட்டீர்களா' என கேட்கும் சூழல் உள்ளது.
கிருஷ்ணகிரியில் தேர்வு மையத்தில் நடந்த நிகழ்வை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு பணியாற்றும் ஆசிரியர்கள் பயத்தை போக்கிட வேண்டும் . இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர், கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது என்றார்.